விரைவில் "வந்தே பாரத்" ரயில் சேவை தொடங்கும் - ரெயில்வே அதிகாரிகள் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


வந்தே பாரத் ரெயில் சேவையை, சென்னை பேசின்பாலம் ரயில் நிலையத்தில் இருந்து விரைவில் தொடங்குவதற்கு பணிகள் நடந்து வருகிறது. பேசின்பாலம் நிலைய டெப்போவில் தெற்கு ரெயில்வே சார்பில் "வந்தே பாரத்" ரெயில்களை இயக்க பிரத்யேக பிட் லைன்கள் தயாராகி வருகிறது. 

இந்த ரெயில் ரூ.19 கோடி செலவில் 6 ரேக் வசதியுடன் உருவாக்கப்படுகிறது. 75 வந்தே "பாரத் ரெயில்கள்" இந்தியா முழுவதும் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதிக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்கு முன்னதாக, சென்னை-பெங்களூரு "வந்தே பாரத்" விரைவு ரயில் தொடங்கப்படவுள்ளது. இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

"வந்தே பாரத்" மூன்றாவது ரேக் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, இந்த வருடம் நவம்பர் அல்லது டிசம்பரில் அகமதாபாத் மற்றும் மும்பை இடையே சேவைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஐ.சி.எப். தொழிற்சாலையில், நான்காவது ரேக் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. மேலும் 2 மாதங்களில் ரெயில்கள் தயாராகி விடும். 4-வது ரேக்கை இயக்குவதற்கு சென்னை-பெங்களூரு உட்பட பல வழித்தடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன, இதுகுறித்து ரெயில்வே வாரியம் இன்னும் முடிவு எடுக்கவில்லை," என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​ஐ.சி.எப். தொழிற்சலையில் தயாரிக்கப்பட்ட "வந்தே பாரத்" ரெயில்களின் 2 ரேக்குகள் புதுடெல்லி-ஸ்ரீ மாதா வைஷ்னவாதேவி மற்றும் புது டெல்லி-வாரணாசி பிரிவுகளில் இயக்கப்படுகின்றன. ரெயில்வே துறை, 102 வந்தே பாரத் ரெயில்களை தொடங்க திட்டமிட்டு உள்ள நிலையில், தெற்கு ரெயில்வேக்கு 13 ரேக்குகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. சென்னை( 6),  திருச்சி (2), கோயம்புத்தூர் (3) மற்றும் திருவனந்தபுரம் (2) கோட்டங்களில் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 

சென்னை-ஜோலார்பேட்டை பிரிவில் ரெயில்களை மணிக்கு 130 கி.மீட்டர் வேகத்தில் இயக்கும் வகையில் தண்டவாளங்களை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் லெவல் கிராசிங் கேட்களை மூடுவது, சுரங்கப் பாதைகள் மற்றும் ரெயில் மேம்பாலங்கள் கட்டுவது ஆகிய பணிகளும் அடங்கும். ஆகஸ்ட் 15-ந்தேதிக்கு முன் சென்னை-பெங்களூரு " வந்தே பாரத்" விரைவு ரயில் இயக்கப்படும் என்று ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

"Vande Bharat" train service start


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->