தமிழகத்தில் இனி இந்த ரெயில் நிலையம் இயங்காது - ரெயில்வே துரையின் அறிவிப்பால் பயணிகள் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


போக்குவரத்து துறையில் இந்திய ரயில்வே மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த ரெயில்வே தான் உலகிலேயே மிக நீளமான ரயில்வே பாதைகள் கொண்டதும், மிக அதிக அளவிலான பயணிகளை ஏற்று செல்லும் பொதுப் போக்குவரத்தாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில், ரயில்வே துறை சார்பில் ரயில்கள் நின்று செல்லும் வகையில் அவ்வப்போது புதிய ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அதேசமயம் பயணிகள் அதிகளவில் வரவேற்பு இல்லாத ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள ரயில் நிலையங்களும் மூடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ரயில் நிலையம் ஒன்றை மூட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் உள்ள கரூர்-சேலம் வழித்தடத்தில் வாங்கல் ரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் வாங்கல் ரயில் நிலையம் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாங்கல் ரயில் நிலையத்தில் இனி எந்த ரயில்களும் நிற்காது என்றும், இன்று மட்டுமே கடைசியாக ரயில்கள் இந்த வழித்தடத்தில் நின்று செல்லும் என்றும் ரயில்வே சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பயணிகளுக்கு வாங்கல் ரயில் நிலையத்திலிருந்து பயணச் சீட்டுகள் வழங்கப்படாது எனவும், பிற ரயில் நிலையங்களில் இருந்து வாங்கல் ரயில் நிலையத்துக்கும் பயணச்சீட்டு வழங்கப்படாது என்றும்" தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vangal railway station close


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->