#தமிழகம் | ஒரு கிராமமே காலி! மொத்தமாக திரண்டு சென்ற கிராம மக்கள்? எங்கே சென்றார்கள்? என்ன காரணம்?! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி அருகே ஒரு கிராமமே சேர்ந்து, திருப்பதி ஏழுமலையான் சாமி தரிசனத்திற்கு சென்றுள்ள சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. 

மேலும் கிராமத்தில் யாரும் இல்லாததால், அந்த கிராமத்திற்கு பாதுகாப்பு அளிக்க போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள கிராமம் வசந்தபுரம். இந்த கிராமத்தில் சுமார் 45 குடியிருப்புகள் இருக்கின்றன.

இந்த ஊர் வழக்கப்படி, நான்கு வருடத்திற்கு ஒரு முறை ஊரில் உள்ள அனைவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று, சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்.

அந்த வகையில் நேற்று இரவு வசந்தபுரம் கிராமத்தை சேர்ந்த அனைவரும், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுள்ளனர்.

அதே சமயத்தில் வயது அடைந்த முதியோர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் சிலர் மட்டுமே தற்போது இந்த கிராமத்தில் தங்கியுள்ளனர்.

மற்றபடி ஊரில் உள்ள அனைவரும் சென்று விட்டதால், தற்போது கிராமமே வெறிச்சோடி காணப்படுகிறது. அதே சமயத்தில் கிராம த்திற்கு பாதுகாப்பாக போச்சம்பள்ளி காவல் நிலைய போலீசாரும், ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vasanthapuram village tirupati ezhumali


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->