விஜய் கட்சி ஆரம்பித்திருப்பதே கூட்டணி வைப்பதற்காகத்தான் போல - விசிக எம்.பி ரவிக்குமார்.! - Seithipunal
Seithipunal


சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், வி.சி.க. துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், "கூட்டணி கட்சிகளின் அழுத்தத்தினால் திருமாவளவன் பங்கேற்வில்லை எனக் கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த திருமாளவன், "எனக்கு எந்த அழுத்தமும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்தி இருக்கிறேன். 

அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கக்கூடிய அளவுக்கு நானும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பலவீனமாக இல்லை" என்று தெரிவித்தார். இந்த நிலையில் திருமாவளவன் குறித்து விஜய் பேசியதை விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது, "வி.சி.க. தலைவர் திருமாவளவன் விரிவாக அறிக்கை கொடுத்ததற்கு பிறகும் விஜய் எங்கள் தலைவரைப் பற்றிப் பேசியதைப் பார்த்தால், அவர் கட்சி ஆரம்பித்திருப்பதே வி.சி.க.வோடு எப்படியாவது கூட்டணி சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காகத்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது. தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் இப்படி வலிந்து வலிந்து அழைப்பு விடுக்கும் நிலை ஏற்பட்டிருக்காது" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vck mp ravikumar speech about vijay


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->