அதிர்ச்சி தகவல் போக்குவரத்து செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் உயர்ந்த காய்கறி விலை !! - Seithipunal
Seithipunal


இந்த மாதத்தில் மட்டும் கடந்த 2 வாரங்களில் மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் பீன்ஸ், முருங்கை, உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம், இஞ்சி, கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலை குறைந்தது 15தில் இருந்து 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. மேலும் போக்குவரத்து செலவுகள் அதிகமானதால்  காய்கறிகளின் விலை சில்லறை சந்தையில் கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது.

கடந்த மாதம் சந்தையில் ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட பீன்ஸ் இப்போது ஒரு கிலோ 140 முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மேலும் பெரு நகரங்களில் உள்ள சந்தைகளில், பச்சை காய்கறி கிலோ, 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சந்தையில் கேரட் கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்கப்படுகிறது, ஆனால் சில்லறை விற்பனைக் கடைகளில் கிலோ ரூ.80க்கு விற்கப்படுகிறது. முருங்கை, வெண்டைக்காய், பீன்ஸ், பீட்ரூட், இஞ்சி, கொத்தமல்லி போன்ற காய்கறிகளின் விலை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.

சமீபத்தில் தமிழகத்தில் பெய்து வரும் பருவ மழையால் காய்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டு மார்க்கெட்டுக்கு வரத்து வெகுவாக குறைந்துள்ளது. சராசரியாக தினமும் 150 லாரிகள் காய்கறிகள் சந்தைக்கு வருகிறது. ஆனால் தற்போது இது 20தில் இருந்து 30 சதவீதமாக குறைந்துள்ளது.

போக்குவரத்துக் கட்டணம் மற்றும் விரயத்தால் சில காய்கறிகளின் விலையும், குறிப்பாக சில்லறை விற்பனைக் கடைகளில் விலை அதிகரித்துள்ளது. வழக்கமாக கோடையில் காய்கறிகளின் விலை ஏற்றம் காணும் போது தேவை அதிகரிக்கும், ஆனால் வரத்து தேக்கமாக இருக்கும். வாகனத்தில் 10 அல்லது 100 மூட்டைகள் காய்கறிகள் வந்தாலும், போக்குவரத்து செலவு ஒரே மாதிரியாக இருக்கும். இதனால் சில்லறை கடைகளில் சில காய்கறிகளின் விலை உயரும் என தெரிவிக்கபட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vegetable price increases due to transport price


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->