வேலூரில் நடைபெறவுள்ள தி.மு.க. முப்பெரும் விழாவிற்கு முதலமைச்சர் வருகை! - Seithipunal
Seithipunal


தி.மு.க பவள விழா உடன் கூடிய முப்பெரும் விழா வேலூரில் வருகின்ற 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கட்சியின் பொதுச் செயலாளர், மற்றும் கட்சி நிர்வாகிகள். எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். 

முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள தி.மு.கவினர் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். 

இதனால் இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவிற்காக வேலூர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் சென்னையில் இருந்து காட்பாடிக்கு 16ஆம் தேதி மாலை ரயில் மூலம் வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 

அவருக்கு காட்பாடி ரயில் நிலையத்தில் தி.மு.க சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டு அன்றிரவு வேலூர் அரசு சுற்றுலா மாளிகை அல்லது தனியார் ஹோட்டலில் தங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

17ஆம் தேதி காலை 10 மணி அளவில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு மு.க. ஸ்டாலின் சென்று அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகளை காணொளி மூலம் திறந்து வைக்கிறார். 

இந்நிகழ்ச்சியை முடித்து விட்டு முதல்வர் முப்பெரும் விழா நடைபெறும் இடத்திற்கு சென்று கொடியேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். 

வேலூரில் முதலமைச்சர் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வரும் நிலையில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore DMK mupperum vizha Chief Minister visit


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->