ஆந்திர அரசின் திட்டத்துக்கு வேலூர் விவசாயிகள் எதிர்ப்பு !!
Vellore farmers protest against Andhra Government
வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றின் குறுக்கே கூடுதல் தடுப்பணைகள் கட்டப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் அறிவித்திருந்தார். அந்த தடுப்பணை திட்டம் வேலூர் மாவட்ட விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் ஆற்றின் குறுக்கே ஏற்கனவே 22 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. இப்போது மேலும், ஆந்திர மாநில முதல் அமைச்சர் சந்திர பாபு நாயுடு மேலும் தடுப்பணை கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளார். தற்போது அங்கு கூடுதல் தடுப்பணைகள் கட்டினால், ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்கு வராது, இதனால் வேலூர் மாவட்டம் பாலைவனமாக மாறும் என விவசாயி ஒருவர் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தின் நீர் விநியோகத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கையை எதிர்க்கும் தீர்மானத்தை அரசுக்கு அனுப்ப வேண்டும் என நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட குறைதீர் கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலர் கோரிக்கை விடுத்தனர்.
அதோடு மேலும் ஒரு ஆற்றின் குறுக்கே 5 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும், பாலாறு, அகரம்சேரி விவசாயத்திற்கு ஆற்றங்கரையோரம் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வேப்ப மரங்களை வரிசை எண் வைத்து பாதுகாக்க வேண்டும், வண்டல் மண் அள்ள அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை குறைதீர் கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலர் கோரிக்கை விடுத்தனர்.
இது மட்டுமில்லாமல் மேலும், மின்சாரம் தாக்குதல், பாம்புக்கடி, கிணற்றில் விழுந்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, 10 லட்சமாக இழப்பீடு வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உசூரில் துணை மின் நிலையத்தை விரைவில் அமைக்க வேண்டும் என்றும், அதற்கான நிலம் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் மூன்று மாத இடைவெளிக்கு பிறகு நடந்த இந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் வி.ஆர்.சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். மேலும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். மின்சாரம், ஊரக வளர்ச்சி, பேரூராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் வராததால், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
English Summary
Vellore farmers protest against Andhra Government