போலீசார் எங்கள் மீது வேண்டுமென்றே வழக்கு போடுகின்றனர் - வித்யாராணி வீரப்பன் பரபரப்பு புகார்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் இன்று மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான சரயுவிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:-

"கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராகிய எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. அதை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் பல்வேறு வகையில் எங்கள் கட்சி பொறுப்பாளர்களுக்கும் தொந்தரவு தருகின்றனர். வேட்புமனு பரிசீலனையில் போது எங்கள் கட்சியினர் மீது காரை ஏற்றுவது போல் சிலர் வந்தனர்.

நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் நின்ற எங்கள் கட்சி பொறுப்பாளர்களிடம் சுயேச்சை வேட்பாளர் ஒருவர், மிரட்டியுள்ளார். தேர்தல் பிரசாரத்தின் போது எங்கள் வாகனங்களின் பின்பு, தேர்தல் அதிகாரிகள் வருவதை தவிர வேறு எந்த வேலையும் செய்வதில்லை. போலீசாரும் எங்கள் மீது வேண்டுமென்றே வழக்கு போடுகின்றனர்.

எங்கள் கட்சியின் வெற்றியை தடுப்பதிலேயே அனைவரும் குறியாக உள்ளனர். இது குறித்த புகார் மனுவை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் வழங்கியுள்ளேன். எத்தனை தடைகள் வந்தாலும் அதை எதிர் கொள்வோம்; வெற்றி பெறுவோம்" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vidhyarani veerappan petition to election officer


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->