125 நாளில் 15,00,000 பேரின் பசியாற்றிய வள்ளல் நினைவிடத்திற்கு சாதனை விருது.!! - Seithipunal
Seithipunal


நடிகராக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்தவர் கேப்டன் விஜயகாந்த். தனது நற்பனி மன்றம் மூலம் உதவி செய்து வாழ்க்கையில் கை தூக்கிவிடும் நபராக கேப்டன் விஜயகாந்த் திகழ்ந்தார்.

பசியோடு இருப்பவர்கள் அவரது திருமணம் மண்டபம் அல்லது அவரது அலுவலகம் வந்தால் போதும். தேவையான அளவுக்கு உணவு சாப்பிட்ட பிறகு செல்வார்கள். அந்த வகையில் மக்களுக்கு உதவிய கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அவரது மறைவை தாங்கிக் கள்ள முடியாத  தமிழக மக்கள் பல ஊர்களில் இருந்து வந்தும் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கேப்டன்  நினைவிடத்திற்கு 125 நாட்களில் தமிழக முழுவதும் அவரது  நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய 15 லட்சம் பார்வையாளர்களுக்கு உணவு வழங்கி உலகின் முதல் நினைவுச்சின்னமாகப் போற்றப்படுகிறது கேப்டன் விஜயகாந்தின் நினைவிடம்.

இதன் காரணமாக லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸால் உலக சாதனையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு நேற்று முன் தினம் நினைவிடத்தில் நடைபெற்று அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijayakanth memorial world record in provide food


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->