விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமல்!! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேர்தலில் முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமல்படுத்துவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மக்களவைத் தேர்தலுடன் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் மக்களவை தேர்தலுடன் நடைபெறாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மக்களவை தேர்தல்கள் முடிவுகள் வெளியாகி  இந்தியாவில் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஜூன் 14ஆம் தேதி வேட்புமனு தகவல் தொடங்கி ஜூன் 21 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற்று ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். மாவட்டம் முழுவதும் ரூ.50,000 க்கு மேல் ரொக்க  பணம் எடுத்துச் செல்லக்கூடாது. விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய திட்டங்கள் அறிவிக்க கூடாது. ஏற்கனவே செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு தடை இல்லை என கூறினார்.

தொடர்ந்து பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, விக்கிரவாண்டி இடை தேர்தலுக்கு தனி வாக்கு இயந்திரங்கள் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்திய இயந்திரங்களை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பயன்படுத்த மாட்டோம். வாக்காளர்களுக்கு எந்த விரலில் மை வைப்பது என்பது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்று கூறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikravandi By Election Villupuram District Rules of Conduct to be enforced


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->