விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பறக்கும் படையினருக்கு மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.!
Vikravandi byelection District Collector orders flying soldiers
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் நேர்மையுடனும் பாரபட்சம் இன்றியும் வாகன சோதனையில் ஈடுபடுங்கள் என பறக்கும் படை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முன்னேற்பாடு பணிகளையும் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
அந்த வகையில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே பறக்கும் படை அதிகாரிகள் நடத்தி வரும் வாகன சோதனையை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர், நேர்மையுடனும் கண்ணியத்துடனும் சோதனையின் போது நடந்து கொள்ள வேண்டும். அதே சமயத்தில் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள வேண்டும்.
உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் என பறக்கும் படை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Vikravandi byelection District Collector orders flying soldiers