இடைத்தேர்தல்... விக்கிரவாண்டியில் தி.மு.க. தொண்டர் நூதன பிரசாரம்.! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ளது. இதனை அடுத்த அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கட்சி தலைவர்கள் அமைச்சர்கள் என அனைவரும் தொகுதி முழுவதும் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விக்கிரவாண்டியில் தி.மு.கவினர் நூதன பிரசாரம் மேற்கொண்டனர். 

இதில் தி.மு.க பேச்சாளர் சேலம் கோவிந்தன் அகத்தியர் வேடம் அணிந்து வீதி வீதியாக சென்று விக்கிரவாண்டி தொகுதி முழுவதும் பாட்டு பாடினார். 

அகத்தியர் வாக்கு போய்க்காது பலிக்கும் என தெரிவித்த இவர் முதலமைச்சரின் நல்லாட்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் நீங்கள் அனைவருக்கும் அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை அளிக்க வேண்டும் என தெரிவித்தார். 

மேலும் அன்னியூர் சிவாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

நூதன முறையில் திமுகவினர் அகத்தியர் வேடம் அணிந்து பிரசாரம் செய்வதை பெண்கள் மற்றும் அனைவரும் வியப்புடன் பார்த்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikravandi Byelection DMK Nuthana Prasaram


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->