விக்கிரவாண்டி இடைத்தோ்தல்: இன்றுடன் நிறைவு பெரும் வேட்பு மனு தாக்கல்.! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைகிறது. 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சியின் முன்னுரை போட்டி நிலவுகிறது. தி.மு.க., பா.ம.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 17 பேர் மனுதாக்கல் செய்தனர். 

இதனை தொடர்ந்து நேற்று நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்போனுவை தாக்கல் செய்தார். இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை நிர்வாகிகள் அன்பு, தென்னரசு, நாதன், திரைப்பட இயக்குனர் களஞ்சியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான பார்வையாளர்களை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்திருப்பதாவது, 

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பொது பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரி அமித்சிங் பன்சல் நியமிக்கப்பட்டுள்ளார். செலவின பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரி மனிஷ்குமார் மீனா, சட்ட ஒழுங்கு பார்வையாளராக ஐபிஎஸ் அதிகாரி அஜய் குமார் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளனர். 

1324 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கிடையே இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikravandi byelection nominations completed today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->