விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பிரசாரத்திற்கு தயாராகிய சீமான்.!
Vikravandi byelection Seeman campaign issue
விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து அடுத்த மாதம் 10 ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி என மும்முனை போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டமன்ற கூட்டத்தொடர் வருகின்ற 21ஆம் தேதி முடிவடைந்த பிறகு அடுத்த வாரம் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாத்தில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை மறுநாள் முதல் விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். மேலும் அவர் தி.மு.க அரசை கண்டித்தும் பிரசாரம் செய்ய உள்ளார்.
மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்ற பிறகு நாம் தமிழர் கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் விக்கிரவாண்டி தொகுதியில் அக்காட்சிக்கு எவ்வளவு ஓட்டுகள் வரும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
English Summary
Vikravandi byelection Seeman campaign issue