தமிழகத்தை உலுக்கிய சம்பவம்.. கள்ளச்சாராயம் குடித்து பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு.!
Villupuram Illegal liquor issue 7 peoples death
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கடற்கரை ஓரமுள்ள வம்பாமேடு பகுதியைச் சேர்ந்த சங்கர், தரணிவேல், சுரேஷ் ஆகியோர் கள்ளச்சாராயம் குடித்ததில் இன்று காலை உயிரிழந்தனர்.
மேலும் கலாச்சாராயம் குடித்த 16 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த நபர்களுக்கு தல 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அளித்தும், உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கிடையே நேற்று கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்தது.
இந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன்மூலம் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
English Summary
Villupuram Illegal liquor issue 7 peoples death