விழுப்புரம் தொகுதி ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி பழுது.!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் தொகுதி வாக்கு என்னும் மையமான அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மூன்றெழுத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில் சிசிடிவி கேமராக்கள் சுமார் 30 நிமிடங்கள் வேலை செய்யவில்லை என புகார் எழுந்தது.

இன்று காலை 9:28 மணி அளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமுக்குக்கான சிசிடிவி கேமரா வேலை செய்யாமல் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

வேட்பாளர்களின் முகவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற அதிகாரிகள் தொழில்நுட்ப வல்லுநர்களை வரவழைத்து சரி செய்தனர். அதன் பிறகு 9: 56 மணி அளவில் அனைத்து சிசிடிவி கேமராக்களும் செயல்பட தொடங்கின. 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறையில் யு.பி.எஸ்ல் பழுது ஏற்பட்டு பின்னர் அது சரி செய்யப்பட்டதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பழனி விளக்கம் அளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Villupuram strong room cctv camera not working


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->