விழுப்புரம் - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மாற்றம்! தெற்கு ரெயில்வே அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை பராமரிப்பு பணி நடந்து கொண்டுள்ள காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனைக்குறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்  கூறியிருப்பது:-

பொறியியல் மற்றும் ரெயில் பாதை பராமரிப்பு பணிகள் திருப்பதி- காட்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையேயான பகுதியில் நடைபெற்று கொண்டு வருகின்றன. இந்த பணயின்  காரணமாக, விழுப்புரம்- திருப்பதி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் குறிப்பிட்ட சில நாட்களுக்கு பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி,  அதிகாலை 5.35 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்படும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் வருகிற 20-ம் தேதி வரை காட்பாடி- திருப்பதி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் காட்பாடி ரெயில் நிலையத்துடன் இந்த ரெயில் சேவை நிறுத்தப்படும்.

பின்னர் இதனைதொடர்ந்து,  திருப்பதியிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ரெயில் மேற்கண்ட சில நாட்களில் திருப்பதி - காட்பாடி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதனால், மாலை 4.40 மணிக்கு இந்த ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து விழுப்புரத்துக்கு புறப்பட்டு செல்லும். இவ்வாறு தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Villupuram to Tirupati Express train service change Southern Railway Notice


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->