திடீரென நுழைந்த ஆட்சியர் - பள்ளிக்கு வராத ஆசிரியைகள் இடைநீக்கம்.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலம் கிராமத்தில் உள்ள எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டின் மறுசீரமைப்பு தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பழனி இன்று காலை சென்றிருந்தபோது, அவ்வழியில் இருந்த கோவிந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சமையலறைக்கு சென்று அங்கு மாணவர்களுக்கு தயாரிக்கப்பட்ட காலை உணவை பரிசோதனை செய்தார்.

பின்னர் அருகாமையில் உள்ள தொடக்கப்பள்ளிக்கு பள்ளி தொடங்கும் நேரத்திற்கு சென்றபோது அங்கு, பணியில் இருக்கவேண்டிய தலைமை ஆசிரியை அங்கயற்கண்ணி மற்றும் ஆசிரியை மாலதி உள்ளிட்டோர் பணியில் இல்லை. 

இதையறிந்த ஆட்சியர், வகுப்பறைக்குள் சென்று மாணவர்களிடம் நடத்தப்பட்ட பாடங்கள் குறித்தும், மனப்பாட பகுதிகளை ஒப்புவிக்கச் சொல்லியும் கேட்டார். பின்னர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனை தொடர்பு கொண்டு குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருகை புரியாத தலைமை ஆசிரியை, ஆசிரியை மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

ஆட்சியரின் உத்தரவின் படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், கோலியனூர் வட்டார கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்தனர். ஆட்சியரின் இந்த அதிரடி நடவடிக்கை விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vilupuram school head master and teacher suspend for not come in school


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->