சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கு பாருங்க.. நேரில் வர டிஜிபி சைலேந்திரபாபுக்கு 500 ரூபாய் அனுப்பிய இளைஞர்.! - Seithipunal
Seithipunal


விழுப்புரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், மணி ஆர்டர் மூலம் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோருக்கு 500 ரூபாய் அனுப்பிய விவரங்கள் குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் குமாரகுப்பத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் விழுப்புரத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்று, தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு 500 ரூபாய் மணி ஆர்டர் அனுப்பியுள்ளார்.

அத்துடன் அவர் அனுப்பிய கடிதத்தில், "விழுப்புரத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி அரசு கட்டிடங்களில் உள்ள சுவர்களில் விளம்பரங்கள் எழுதுவதும், விளம்பர பேனர்கள் வைப்பதும் என விதிமீறல் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

எனவே, இதனை நீங்கள் நேரில் வந்து பார்ப்பதற்காக உங்களின் பயண படியாக ரூபாய் 500 அனுப்பி உள்ளேன். இந்த தொகையை வைத்து சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கு வந்து பார்வையிட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு அந்த கடிதத்தில் இளைஞர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்த கடிதம் மற்றும் அவர் அனுப்பிய மணி ஆர்டர் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. மேலும் வீடியோ ஒன்றும் அவர் வெளியிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vilupuram Youngman letter to dgp


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->