புதுச்சேரியில் நீர்நிலைகளைக் காக்கவேண்டும்.. துணைநிலை ஆளுநருக்கு பாரதிதாசன் அறக்கட்டளை வலியுறுத்தல்!
Water bodies in Puducherry should be protected. Bharathidasan Foundation urges Lieutenant Governor
சென்னை -புதுச்சேரி- கடலூர் தொடர்வண்டிப் போக்குவரத்து விரைந்து அமைக்கப்படவேண்டும் என துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனுடன் பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவர் கோ.பாரதி சந்தித்து வலியுறுத்தினார்.
புதுச்சேரித் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை பாரதிதாசன் பெயரனும் பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவருமான கவிஞர் கோ.பாரதி ஆளுநர் மாளிகையில் சந்தித்து,புதுச்சேரிவளர்ச்சிக்கும்,புதுச்சேரிமக்கள்பயன்பாட்டுக்கும் ஏதுவாகச் சென்னை -புதுச்சேரி- கடலூர்வழியலான கிழக்குக் கடற்கரைச்சாலை தொடர்வண்டிப் போக்குவரத்து விரைந்து அமைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் உலகத் தமிழ் மாநாட்டினைப் புதுவைத் தமிழறிஞர்களைக்கொண்டு விரைவில் நடத்த வேண்டும்.புதுச்சேரியில் கணினித் தகவல் தொழில்நுட்பம் படித்த இளைஞர்கள் வெளிமாநிலங்களில் வேலைக்குச் சென்று வருவாய் ஈட்டுகின்றனர்.தங்கள் பெற்றோர், உற்றார் உறவினரைப் பிரிந்து பல இன்னல்களுக்கு நடுவே தனியே வசிக்கும் அவர்களுக்கு உதவியாக அவர்கள் புதுச்சேரியில் இருந்தே பணி ஆற்றும் வகையில் தொழில்நுட்பப் பூங்கா விரைவில் ஏற்படுத்தித் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சித்துறை அமைக்கவேண்டும் பாரதிதாசன் பெயரில் அரசு விருது வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.புதுச்சேரி மாநிலத்தில் நீர்நிலைகளைக் காக்கவேண்டும்.இடையூறும் நெருக்கடியும் இல்லாத போக்குவரத்துக்கானவகைசெய்யவேண்டும்எனவும்கேட்டுக்கொண்டார்.இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை தோற்றுவிக்க வேண்டும்.மகளிர் பாதுகாப்புக்காக காவல்துறையில் தனியாக ஓர் அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
English Summary
Water bodies in Puducherry should be protected. Bharathidasan Foundation urges Lieutenant Governor