மக்களின் தேவைகளை பார்த்து பார்த்து செய்து வருகிறோம்..முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு! - Seithipunal
Seithipunal


மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 2 கோடி பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றும் மக்களின் தேவைகளை பார்த்து பார்த்து செய்து வருகிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1,000 முதல்வர் மருந்தகங்களை சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.அதன்பின்னர் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

திமுக அரசு ஆட்சிக்கு வந்த கொரோனா காலத்தில் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வைரஸ் பாதிப்பை பெருமளவில் கட்டுப்படுத்தினோம் என்றும்  இரண்டு தவனை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி மக்களை காப்பற்றினோம் என்றும்  இதுதான் உயிர் காக்கும் பணி என பேசினார்.

மேலும் கல்வியும் மருத்துவமும்தான் திராவிட மாடல் அரசின் இரு கண்கள். சிறந்த மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கி தரமான மருத்துவம் கிடைக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்றும்  குறைந்த விலையில் மருந்துகள் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும்  நமது அரசு சாதாரண, சாமானியனுக்கான அரசு என்பதற்கு சான்றே இந்த திட்டம் என்றும்  நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும் என  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் முதல்வர் மருந்தகம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட, சென்னை சாலிகிராமம் உட்பட்ட தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மருந்து கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும்  48 மணி நேரத்தில் மருந்துகளை அனுப்பி வைக்க வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் மருந்தாளர்களுக்கு மூன்று கட்டமாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என பேசினார்.

அதேபோல மருந்தகம் அமைக்க தொழில்முனைவோருக்கு ரூ.3 லட்சம் மானியமாக வழங்கப்படும் என்றும்  பி.பார்ம் படித்த 1,000பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றும்  ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மருந்து செலவுகளை குறைக்கவே, முதல்வர் மருந்தகம். திராவிட மாடல் அரசு சாதாரண மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 2 கோடி பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றும் மக்களின் தேவைகளை பார்த்து பார்த்து செய்து வருகிறோம் என்றும்  முதல்வர் மருந்தகங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்று கூறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்வர் மருந்தகங்கள் திட்டத்தின் நோக்கம் சிதையாமல் அதை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும். நிதி நெருக்கடி இருந்தாலும் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம் என்றும் நாட்டுக்கே முன்மாதிரியாக தமிழ்நாடு உள்ளது. மக்களின் குடும்ப சுமையை குறைக்க.. இது சாமானிய மக்களுக்கான அரசு. மக்களுக்கு நன்மை செய்வதில் திராவிட மாடல் அரசு கணக்கு பார்ப்பதில்லை என  இவ்வாறு அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

We are looking at the needs of the people. Tamil Nadu Chief Minister MK Stalin


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->