வெளுத்து வாங்கும் கனமழை! மெட்ரோ ரெயில் வழக்கம் போல் இயங்கும்! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. இந்த புயலின் போது 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதுடன், அதி கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த சூழலில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பொதுமக்களை அவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை நகரில், மாநகர பேருந்துகள் வழக்கம் போல் இயங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மெட்ரோ ரெயில் சேவைவும் வழக்கம் போல் இயக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு அறிவுறுத்தல்கள்:

  • பயணிகள் படிக்கட்டுகள் பயன்படுத்த வேண்டும்.
  • கோயம்பேடு, பரங்கிமலை, அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையங்களில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ளதால், அந்த பகுதிகளை பயணிகள் தவிர்க்க வேண்டும்.
  • உதவி தேவைப்பட்டால், பயணிகள் 1860 425 1515 (மெட்ரோ உதவி எண்) மற்றும் 1553706 (மகளிர் உதவி எண்) ஆகிய எண்ணுகளை தொடர்பு கொள்ளலாம்.

இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றுவதன் மூலம், பயணிகள் பாதுகாப்பாக மற்றும் அவசியமாக முன் நிலையான சேவையைப் பெற முடியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Whitening heavy rain Metro Rail will run as usual


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->