கவரப்பேட்டை ரயில் விபத்தில் சிக்கப் போவது யார்?..மேலும் 20 பேருக்கு சம்மன்! - Seithipunal
Seithipunal


நடப்பு மாதம் 11-ம் தேதி பாக்மதி விரைவு ரெயில் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு  சென்று கொண்டிருந்தது. தொடர்ந்து அந்த ரயில், திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தபோது, அங்கு ஏற்கெனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக வந்து மோதி விபத்திற்குள்ளானது.  இந்த விபத்தில், சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்த நிலையியில்,  சிக்னல் கோளாறு காரணமாக ரெயில் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த விபத்தில்  19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்து தொடர்பாக கவரப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர், லோகோ பைலட் உள்ளிட்ட 16 பேரை விசாரணைக்கு ஆஜராக ரெயில்வே துறை சார்பில் ஏற்கெனவே சம்மன் அனுப்பி உள்ளது.  

மேலும் இந்த விவகாரத்தில் சிக்னல், என்ஜினியர் துறையைச் சேர்ந்த 10 பேர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

நேற்று ரயில்வே மூத்த அதிகாரிகள் 7 பேர் அடங்கிய குழு ஒன்று விபத்து நடந்த இடத்தில் விசாரணை நடத்தி கூட்டு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதில் ரயில் தடம் புரண்டிருக்கலாம் என்றும்,  அதன் மூலம் இந்த மோதல் நடந்திருக்கும் என்று தெரிவித்து, ரயில் விபத்தின் பின்னணியில் சதி இல்லை என்று தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக ரயில்வே ஊழியர்கள் மேலும் 20 பேருக்கு கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Who is going to get involved in the kavarappettai train accident and 20 people have been summoned


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->