தூத்துக்குடி : விளாத்திகுளம் அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவன் மீது கொலை முயற்சி.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி : விளாத்திகுளம் அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவன் மீது கொலை முயற்சி.!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் அருகே கவுண்டம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அழகு சுந்தரபாண்டி-புனித எப்சிபா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், அழகு சுந்தரபாண்டி கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, அவரை அடையாளம் தெரியாத நான்கு பேர் திடீரென்று வழிமறைத்து அரிவாளால் வெட்டியுள்ளனர்.

இதில், அழகு சுந்தரபாண்டி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அழகு சுந்தரபாண்டியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக அழகு சுந்தர பாண்டியன் மனைவி புனித எப்சிபா உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் தெரிவித்ததாவது, அழகு சுந்தர பாண்டியன் மனைவி புனித எப்சிபாவிற்கும், கவுண்டன் பட்டியைச் சேர்ந்த மாரி ராஜ் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது.

இதற்கு அழகு சுந்தரபாண்டி இடையூறாக இருந்ததால், அவரது மனைவி எப்சிபா மற்றும் மாரிராஜ் உள்ளிட்டோர் கூலிப்படை மூலமாகக் கொலை செய்ய வேண்டும் என்றுத் திட்டமிட்டுள்ளனர். இதற்கு மாரி ராஜன் நண்பர் சரவணன் உதவியாக இருந்துள்ளார்.

இதையடுத்து புனித எப்சிபா, மாரிராஜ், சரவணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும், கொலை முயற்சியில் ஈடுபட்ட கூலிப்படையைச் சேர்ந்தவர்களை தற்போது தேடி வருகிறோம்" என்றுத் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wife tried kill attack to husband in thoothukudi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->