போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு.. காவல்நிலையத்தின் முன் பெண் தற்கொலை முயற்சி..! - Seithipunal
Seithipunal


புகார் மீது நடவடிக்கை எடுக்கததால் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, கொளத்தூரை சேர்ந்தவர் வத்சலா. இவர் தனது மகன் மருமகளுடன் வசித்து வருகிறார். அந்த பகுதியை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர்களான கண்ணன், ராமமூர்த்தி ஆகியோர் வத்சலா வீட்டின் அசல் பத்திரங்களை வாங்கி அதனை வைத்து போலி பத்திரம் தயாரித்தனர்.

அதனை வைத்து வங்கியில் 1 கோடி கடன் பெற்றதாக தெரிகிறது. தற்போது வட்டியும், அசலுமாக ரூ.1 கோடியே 30 லட்சம் வந்ததால் கடன் வழங்கிய வங்கி, வீட்டை ஏலம் விட நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த வத்சலா காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர்.

மூன்று மாதங்கள் ஆகியும் இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு உள்ளான வத்சலா தனது குடும்பத்தினருடன் புகார் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து கேட்டுள்ளார். அப்போது வத்சலாவின் மருமகள் ஜான்சி தீக்குளிக்க முயன்றார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவர் மீது தண்ணீர் ஊற்றினர். அதன் பின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தல அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Attempted Suicide In Police Station


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->