அண்ணன் பேச மறுத்ததால் பெண் என்ஜினியர் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள பழைய பல்லாவரம், சாரா நகர் சாலையில் வசித்து வருபவர்கள் குமரன் - சரஸ்வதி தம்பதியினர். இவர்களுக்கு விட்டல் என்ற மகனும், மலர்விழி என்ற மகளும் உள்ளனர். என்ஜினீயரான மலர்விழி, பூந்தமல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், மலர்விழியிடம் அவரது அண்ணன் விட்டல், செலவுக்கு பத்து ரூபாய் தரும்படி கேட்டுள்ளார். ஆனால் மலர்விழி பணம் இல்லை என்று கூறி கொடுக்க மறுத்துள்ளார். இதன் காரணமாக அண்ணன்-தங்கைக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த விட்டல், 'இனிமேல் உன்னிடம் பேசவே மாட்டேன்' என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த மலர்விழி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணன் பேச மறுத்ததால் பெண் என்ஜினியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman engineer sucide in chennai pallavaram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->