பெண் நிர்வாகி தாக்கிய விவகாரம்: விரைந்துள்ள 3 தனி படைகள்... அமர் பிரசாத் ஜாமின் கோரி மனு! ‌ - Seithipunal
Seithipunal


பெண் நிர்வாகியின் சகோதரியை தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் தலைமறைவாக உள்ள பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். 

பாஜக நிர்வாகியான ஆண்டாள் என்பவரை தாக்க முயன்ற போது அவரது சகோதரி கடுமையாக தாக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக ஆண்டாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் 9 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இந்த விவகாரத்தில் அமர் பிரசாத்தை கைது செய்து விசாரணை நடத்த முயன்ற போது அவர் தலைமறைவாக இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. 

இதனால் போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்ட வந்த நிலையில் அமர் பிரசாத் ஆந்திராவில் தலைமறைவாக இருப்பதாக தெரியவந்து 2 தனி படைகள் அமைக்கப்பட்டு ஆந்திராவில் தேடி வந்தனர். 

குறிப்பாக பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள காரணத்தினால் கைது நடவடிக்கை தீவிரமாக இருக்கும் என்பதால் தொடர்ந்து அவர் குஜராத், மும்பை, டெல்லி போன்ற இடங்களில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அதன் அடிப்படையில் தனிப்பட்ட போலீசார் குஜராத், டெல்லி, மும்பை போன்ற இடங்களில் தேடி வருகின்றனர். இந்த கைது நடவடிக்கைகளில் இருந்து உடனடியாக தப்பிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் அமர் பிரசாத் முன்ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த முன்ஜாமின் மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman executive issue Amar Prasad bail petition


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->