காணாமல் போன பெண் சடலமாக மீட்பு.. காவல்துறை தீவிர விசாரணை..!
Woman Founded as Dead Near kanjipuram
மாயமான பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டம், எடமைச்சி கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவருக்கு திருமணமாகி பூங்கோதை என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 10ம் தேதி பூங்கோதை மாயமானார் என கூறப்படுகிறது. எங்கும் தேடியும் கிடைக்காததால் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், இடமச்சி கிராமம் சுடுகாடு அருகே உள்ள முட்புதரில் வேப்பமரத்தில் அழுகிய நிலையில் பிணம் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரந்த பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த காவல்துறையினர் அங்கு சென்று பார்த்த போது அது மாயமான பூங்கோதை என்பது தெரியவந்தது. இதனை அடுத்து, அவரின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
English Summary
Woman Founded as Dead Near kanjipuram