குழந்தையை மருத்துவர் எடுத்துக்கொண்டதாக கூறிய பெண்.! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி.!
woman lied that the doctor had taken her baby
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி அடுத்த கண்ணப்பாளையத்தின் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருப்பவர் மூர்த்தி. இவர் மனைவி உமா மகேஸ்வரி. இவர் வேலப்பன் சாவடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக தனது தாயுடன் வந்து சேர்ந்துள்ளார்.
இதையடுத்து, மருத்துவமனையில் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்றும், அங்கு, குழந்தைக்கு மூச்சுத் திணறல் இருப்பதால் இன்குபேட்டரில் வைக்க வேண்டும் என்று எடுத்துச் சென்றதாகவும் அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரசவத்திற்குப் பின்பு தான் மருத்துவமனைக்கு வெளியே சென்றபோது குழந்தையை எடுத்து வைத்துக் கொண்டு, தனக்கு குழந்தை பிறக்கவில்லை என்று ஏமாற்றுவதாக கூறி சத்தம் போட்டுள்ளார்.
இதையறிந்த உமா மகேஸ்வரியின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மருத்துவமனைக்கு சென்று, உமா மகேஸ்வரி தனக்கு பிறந்த குழந்தை என்று கணவர் மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிய ஒரு குழந்தையின் புகைப்படத்தைக் காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு மருத்துவர்கள் உமா மகேஸ்வரி தங்கள் மருத்துவமனைக்கு வந்ததே இல்லை என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ததில், உமா மகேஸ்வரி பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, மருத்துவர்கள் அந்த இளம்பெண்ணை பரிசோதனை செய்ததில் அவர் கர்ப்பமானதற்கான அறிகுறியே இல்லை. அவர் கணவர் குடும்பத்தை நம்ப வைப்பதற்காக நாடகமாடியுள்ளார் என்பது தெரிய வந்தது.
இதையறிந்த கணவர் வீட்டார் அங்கிருந்து ஆவேசத்துடன் கலைந்து சென்றனர். மேலும், போலீசார் குழந்தை நாடகம் ஆடிய அந்த பெண்ணையும் அவரது தாயையும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
English Summary
woman lied that the doctor had taken her baby