வைரல் வீடியோ || பெரிய ஆளா நீ? 10 பேரோட வந்து ரவுடித்தனம் பண்றியா? விசிக ஊ.ம தலைவரை வெளுத்த பெண் ஆய்வாளர்! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரிக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் வரி செலுத்தவில்லை எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அந்த கல்குவாரியை விசிக ஊராட்சி மன்ற தலைமையிலான குழுவினர் அனுமதியின்றி முற்றுகையிட முயன்றுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த மயிலம் காவல் நிலைய பெண் ஆய்வாளர் அனுமதி இன்றி கல்குவாரியை முற்றுகையிடம் முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவருடன் வந்தவர்களை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதனால் ஊராட்சி மன்ற தலைவருக்கும் பெண் காவல் ஆய்வாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதத்தில் பெண் காவல் ஆய்வாளர் விசிக ஊராட்சி மன்ற தலைவரிடம் "கலெக்டரின் ஆர்டரை குடு நீ. உனக்கு அதிகாரம் யார் கொடுத்தது. அதிகாரத்தை நீயே எடுத்துப்பியா.. என பேசிக் கொண்டிருக்கும் போதே சுப்ரீம் கோர்ட் ஆர்டர் இருக்கு என ஊராட்சி மன்ற தலைவர் கூற "ஊராட்சி மன்ற தலைவருக்கு சுப்ரீம் கோர்ட் கொடுத்த ஆர்டரை காட்டு" என விசிக ஊராட்சி மன்ற தலைவரிடம் ஆய்வாளர் காட்டமாக கேள்வி எழுப்பினார்.

அதற்கு விசிக ஊராட்சி மன்ற தலைவர் "நான் கலெக்டர் ஆபீசில் காட்டுகிறேன்" எனக் கூற இதனால் டென்ஷனான பெண் காவல் ஆய்வாளர் "போலீஸ் கேட்கும் போது நீ ஆர்டர் காட்டணும், உன்னோட பெட்டிஷன் எல்லாம் எனக்கு தேவையில்ல.. கலெக்டரோட ஆர்டர் காட்டு... மனு போட்டுட்டா பெரிய ஆள்னு நினைச்சுட்டு இருக்கியா.? என கேள்வி எழுப்ப நான் கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறேன் என ஊராட்சி மன்ற தலைவர் விடாமல் வாக்குவாதம் செய்தார்.

அதற்கு "இங்க வந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனைய பண்ணிட்டு... நீ போய் கோர்ட்டில் பார்த்துப்பியா..? 10 பேர கூட்டிட்டு வந்து ரவுடித்தனம் பண்ணிட்டு இருக்க நீ..." என விசிக ஊராட்சி மன்ற தலைவரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெண் ஆய்வாளரின் இத்தகைய செயலுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Police argued with VCK Panchayat Council President video viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->