செங்கல்பட்டு || மருத்துவர்களை மிரட்டி 12 லட்சம் வாங்கிய பெண் ஆய்வாளர் இடைநீக்கம்.!! - Seithipunal
Seithipunal


பெண் ஆய்வாளர் ஒருவர் மருத்துவர்களை மிரட்டி லட்ச கணக்கில் பணம் வாங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் மகிதா அன்ன கிறிஸ்டி என்பவர் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

இவர், போக்சோ வழக்கில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த தனியார் மற்றும் அரசு மருத்துவர்கள் இரண்டு பேரை மிரட்டி, 12 லட்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் ஆய்வாளர் மகிதா அன்ன கிறிஸ்டி சிறுமிக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததாக தனியார் மருத்துவரிடம் இருந்து 2 லட்ச ரூபாயும், அரசு மருத்துவரிடம் இருந்து 10 லட்சம் ரூபாயும் வழக்கறிஞர் மூலம் வாங்கியது தெரியவந்தது.

இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், பெண் ஆய்வாளர் மகிதா அன்ன கிறிஸ்டியை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman police inspector suspend for bought money


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->