திருச்சி || லஞ்சம் வாங்கிய பெண் துணை ஆய்வாளர் - கையும் களவுமாக சிக்கிய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


திருச்சி || லஞ்சம் வாங்கிய பெண் துணை ஆய்வாளர் - கையும் களவுமாக சிக்கிய சம்பவம்.!

கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சரத் அஜிதா. இந்தத் தம்பதியினர் திருச்சி மாவட்டத்தில் உள்ள சத்திரம் பேருந்துநிலையம் பகுதியில் கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் ஒன்று வைத்து நடத்தி வருகிறார்கள்.

இந்த மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக 
போலீஸாருக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் படி திருச்சி மாநகர விபசார தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், அந்த வழக்கை தனக்கு சாதகமாக முடித்து தரும்படி அஜிதா விபசார தடுப்பு பிரிவு போலீசாரை அணுகி உள்ளார். அப்போது, வழக்கை சாதகமாக முடித்து தர ரூ.10 ஆயிரம் லஞ்சம் தரும்படி அஜிதாவிடம் பெண் போலீஸ் துணை காவல் ஆய்வாளர் ரமா கேட்டுள்ளார். 

அதற்கு அஜித் வழக்கு காரணமாக தற்போது மசாஜ் சென்டரை நடத்த முடியாத நிலையில் இருப்பதால் தன்னால் ரூ.10 ஆயிரம் தரமுடியாது என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், துணை ஆய்வாளர் ரமா, முதலில் முன்பணமாக ரூ.3 ஆயிரம் கொடுத்தால், வழக்கை உனக்கு சாதகமாக முடித்து தருகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அஜிதா, சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் செய்தார். உடனே லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய நோட்டுகளை அஜிதாவிடம் கொடுத்து, அதனை துணை ஆய்வாளர் ராமாவிடம் கொடுக்குமாறு தெரிவித்துள்ளனர். அதன் படி அஜிதா விபசார தடுப்பு பிரிவு போலீஸ் நிலையத்துக்கு சென்று, துணை ஆய்வாளர் ரமாவிடம் பணத்தைக் கொடுத்துள்ளார்.

அந்த பணத்தை துணை ஆய்வாளர் ரமா வாங்கி எண்ணியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரைக் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, போலீசார் விபசார தடுப்பு பிரிவு அலுவலகம், துணை ஆய்வாளர் ரமாவின் வீடு உள்ளிட்டவற்றில் சோதனை மேற்கொண்டு, ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். 

இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் ரமாவிடம் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்ததால் ரமாவை திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் திருச்சி பெண்கள் தனி சிறையில் அடைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman police sub inspector arrested for bribe in trichy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->