திருச்சி : இரண்டாவது திருமணம் செய்த கணவன் - நடவடிக்கை எடுக்க கோரி மனைவி தர்ணா.!!
woman protest police station in trichy
இரண்டாவது திருமணம் செய்த கணவன் - நடவடிக்கை எடுக்க கோரி மனைவி தர்ணா.!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி தாலுகாவில் தும்பலம் பெருமாள் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலையரசி. இவர் அதே ஊரைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவரை கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.
இதற்கிடையே ராஜசேகர் கலையரசிக்கு தெரியாமல் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த கலையரசி முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால் இதுவரைக்கும் அந்த புகார் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி கலையரிசி கடந்த மூன்று மாத காலமாக காவல் நிலையத்திற்கு அலைந்த வண்ணம் இருந்துள்ளார்.
இந்த நிலையில், கலையரிசி இன்று முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய வாசல் முன்பாக அமர்ந்து கணவன் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
woman protest police station in trichy