4 வயது மகனை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம்.!
woman runs away with illegal boyfriend in kallakurichi
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நான்கு வயது மகனை தவிக்க விட்டு கள்ளக்காதலுடன் ஓடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் புக்குளம் பகுதியை சேர்த்தவர் ஏழுமலை. இவரது மனைவி சிவசங்கரி(26). இவர்களுக்கு நான்கு வயதில் மகன் உள்ளான். இந்நிலையில் ஏழுமலை கொத்தனார் வேலைக்காக சவுதி அரேபியாவிற்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சென்றார்.
இதனால் அதே பகுதியில் உள்ள தாய் வீட்டில் சிவசங்கரி மகனுடன் வசித்து வந்தார். இதையடுத்து சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சிவசங்கரி வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பெற்றோர் அனைத்து இடங்களிலும் தேடினர்.
ஆனால் எங்கு தேடியும் சிவசங்கரி கிடைக்காததால் இது குறித்து சிவசங்கரியின் தந்தை தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்பொழுது, தனது மகள் செல்போனில் தொடர்பு கொண்டு நான் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டேன். என்னை யாரும் தேட வேண்டாம் என்று கூறி செல்போன் இணைப்பை துண்டித்து விட்டதாக காவல் நிலையத்தில் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சிவசங்கரியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
woman runs away with illegal boyfriend in kallakurichi