சென்னை விமான நிலையத்தில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்.! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


சென்னை விமான நிலையத்தில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்.! நடந்தது என்ன?

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாலாஜி--ஐஸ்வர்யா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் பாலாஜி அமெரிக்காவில் பணிபுரிந்து வருவதால் ஐஸ்வர்யா தனது இரண்டு பிள்ளைகளுடன் பொழிச்சலூரில் வசித்து வந்தார். 

இதற்கிடையே ஐஸ்வர்யா கணவர் வெளிநாட்டிலும், தான் இங்கேயும் இருப்பதால் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் ஐஸ்வர்யா தனது இரண்டு பிள்ளைகளுடன் சென்னை விமான நிலைய புதிய இணையத்தில் உள்ள திரையரங்கிற்கு நேற்று படம் பார்க்கச் சென்றிருந்தார். 

அங்கு படம் ஓடிக் கொண்டிருக்கும் போது ஐஸ்வர்யா பிள்ளைகளைத் தியேட்டரில் அமர வைத்து விட்டு நான்காவது மாடிக்கு சென்று அங்கிருந்து திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதைப்பார்த்த விமான நிலைய போலீஸார், விரைந்து சென்று ஐஸ்வர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீஸார் சம்பவம் குறித்து விசாரணை செய்ததில் தற்கொலை செய்துகொண்ட  ஐஸ்வர்யா மனஅழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்தது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman sucide in chennai international airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->