மகனுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்திய தாய் - திருப்பூரில் பரபரப்பு..!
woman sucide in tirupur for eat poison
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் மாமாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் - மாலா தம்பதியினர். இவர்களுடைய மகன் சுஜித்குமார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அருண்குமார் இறந்துவிட்டதனால் மாலா தனது மகனை அழைத்துக் கொண்டு திருப்பூர் மங்கலம் ரோடு கோழி பண்ணை அருகே உள்ள கே.டி.கே.தோட்டம் பகுதியில் குடியிருந்து பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில், மாலா தனது மகனுக்கு உணவில் விஷத்தை கலந்து கொடுத்து விட்டு தானும் விஷத்தை குடித்துள்ளார். சிறிது நேரத்தில் இருவரும் வீட்டில் மயங்கி விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மாலாவின் உடல் நிலை மிகவும் மோசமானதால் அவர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைபலனின்றி மாலா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல் சுஜித் குமாருக்கு திருப்பூர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
woman sucide in tirupur for eat poison