இறந்த படி பிறந்த குழந்தை.. நொடிப்பொழுதில் தாய்க்கு நேர்ந்த கொடூரம் - தஞ்சாவூரில் பரபரப்பு.!
women and baby died at delivery time in thanjavur
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை அடுத்த துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்கள் பிரவீன் - சந்தியா. பெங்களுருரில் வசித்து வந்த இந்த தம்பதிக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் சந்தியா இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்தார்.
இந்த நிலையில் சந்தியாவுக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் பிரசவத்திற்காக பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ஆண்குழந்தை இறந்த நிலையில், பிறந்தது. மேலும், அவருக்கு அதிகளவில் ரத்தபோக்கு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது. உடனே சந்தியாவை ஆம்புலன்சில் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சந்தியாவின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு ஆம்புலன்ஸில் உடலை வைத்தபடியே போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் சிலர் ஆவேசமடைந்து மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்து அடித்து உடைக்க தொடங்கினர். சிலர் மருத்துவமனை மீது கல்வீசி தாக்கினர்.
English Summary
women and baby died at delivery time in thanjavur