தமிழகத்தில் வேலைக்காக காத்திருப்பவர்களில் அதிக பேர் பெண்கள் தான்.!
Women are majority in waiting for jobs in TN
தமிழ்நாடு முழுவதும் சுமார் அறுபத்தேழு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்துள்ளனர். அவ்வாறு பதிவு செய்தவர்களில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம்.
இதையடுத்து, பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்து வெளியேறுபவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
அப்படி, பதிவு செய்துள்ளவர்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் தங்களது வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டும்.
இந்த நிலையில், தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மொத்தம் 31 லட்சத்து 49 ஆயிரத்து 398 ஆண்களும், 36 லட்சத்து 9 ஆயிரத்து 27 பெண்களும், மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் 273 பேரும் பதிவு செய்து வேலைவாய்ப்பிற்கு காத்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
இவற்றில், 46 வயது முதல் 60 வரை வயது முதியவர்கள் 2 லட்சத்து 30 ஆயிரத்து 155 பேர் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. கல்லூரி மாணவர்கள் மட்டும் மொத்தம் 29 லட்சம் பேர் காத்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Women are majority in waiting for jobs in TN