அரியலூரில் சோகம் - கணவரின் பிறப்புறுப்பை அறுத்த மனைவி - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.!
women arrested for kill husband in ariyalur
அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை அருகே ஆனந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சின்னப்பா-பச்சையம்மாள். இந்தத் தம்பதியினருக்கு பாலமுருகன், பானுப்பிரியா என்ற இரண்டு பிள்ளைகள் இருந்தனர். அதில், மகன் பாலமுருகன் சிங்கப்பூரில் வேலைபார்த்து வரும் நிலையில், மகள் பானுப்பிரியாவுக்கு திருமணம் நடந்து முடிந்தது.
இதனால், சின்னப்பாவும் பச்சையம்மாளும் தனியாக வீட்டில் வசித்து வந்த நிலையில், கணவர் சின்னப்பா தினமும் குடித்துவிட்டு, வந்து பச்சையம்மாளை தொந்தரவு செய்து வந்துள்ளார். அதன் படி நேற்று முன்தினமும் சின்னப்பா பிரச்சனை செய்ததால் மனைவி, மகள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.
இந்த நிலையில் நேற்று காலை சின்னப்பா ரத்த வெள்ளத்தில் இரண்டு கை, கால் நரம்புகள் அறுக்கப்பட்டும், பிறப்புறுப்பு அறுபட்ட நிலையிலும் சடலமாக கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சின்னப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், போலீசார் சின்னப்பாவின் மனைவி பச்சையம்மாளை விசாரித்தபோது, கணவர் சின்னப்பா அடிக்கடி குடித்துவிட்டு தன்னை துன்புறுத்தியதாகவும், அதனால் தான் அவரை கொன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து பச்சையம்மாளை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
women arrested for kill husband in ariyalur