புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை..உதயநிதி ஸ்டாலின் உறுதி!  - Seithipunal
Seithipunal


மகளிர் உரிமைத் தொகை பெற புதிதாக விண்ணப்பம் செய்பவர்களுக்கு 3 மாதங்களுக்குள் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் கூறியுள்ளார்.

3வது நாள் தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை தொடங்கியது .இந்த நிலையில் சட்டசபைக்கு இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை தந்துள்ளனர் .அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை தந்துள்ளனர்.இந்தநிலையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.

அப்போது  சட்டப்பேரவையில் வினாக்கள்-விடைகள் நேரத்தில் பேசிய வேடச்சந்தூர் உறுப்பினர் காந்திராஜன், திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூரில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் மகளிர் எண்ணிக்கையை தெரிவிக்க அரசு முன் வருமா? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் விண்ணப்பித்த 5 லட்சத்து 27 ஆயிரம் பேரில் 4 லட்சத்து 897 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருவதாகவும்,வேடச்சந்தூர் தொகுதியில் மட்டும் இத்திட்டத்தின் கீழ் 62 ஆயிரம் பேர் பயனடைந்து வருவதாகவும் அவர் பதில் அளித்தார்.

தொடர்ந்து கேள்வி எழுப்பிய காந்திராஜன், தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறாத மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழகம் முழுவதும் மொத்தமாக ஒரு கோடியே 63 லட்சத்து 57 ஆயிரத்து 195 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், அதில் 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 198 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் மேல்முறையீட்டின் மூலம் 9 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டதாக கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்தமாக 1 கோடியே 14 லட்சத்து 65 ஆயிரத்து 525 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டிருப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின்,காந்திராஜனுக்கு பதிலளித்தார்.

மேலும் இதுவரை இத்திட்டத்தின் கீழ் பயன்பெறாத மகளிரை, உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற நடவடிக்கை எடுக்கும் வகையில், புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கு 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women s royalty to new applicants within 3 months Udhayanidhi Stalin confirms


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->