#Breaking : சட்டவிரோத மதுவிற்பனை.. உள்ளே புகுந்து சூறையாடிய பெண்களால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பான வகையில் பெட்டி கடையில் வைத்து மதுபான விற்பனை செய்து வந்த கடையை பெண்கள் சூறையாடியதால் அப்பகுதியில் பரபரப்பு அதிர்ச்சியும் ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம் பூதினாத்தம் கிராமத்தைச் சார்ந்தவர் ஜெயராமன். இவர் அப்பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் அந்த கடையில் வைத்து சட்டத்திற்கு விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வந்திருக்கிறார் என்று தெரிகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பெண்கள் ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.

இதனால் ஆத்திரத்தில் இருந்த கிராம மக்கள் அவரது கடையை சூறையாடினர். பெண்கள் அனைவரும் இணைந்து சட்டத்திற்கு புறம்பாக மது விற்பதை கண்டித்து அவரது கடையை சூறையாடினர். மேலும் கடையில் இருந்த மது பாட்டில்களை எடுத்து சாலையில் போட்டு உடைத்தனர். இதனால பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொது மக்களை அமைதிப்படுத்தி இது தொடர்பாக விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில் சட்டத்திற்கு புறம்பாக  மது விற்ற ஜெயராமன் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women vandalized a shop for selling illegal liquor


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->