பெண்கள் பாதுகாப்பு: நாட்டிலேயே சென்னைதான் டாப்! - Seithipunal
Seithipunal


"நம்பியோ" NUMBEO என்ற தனியார் நிறுவனம்  உலகின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு குறித்து சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு ஒன்று நடத்தியது
 செய்தித்தாள்களில் வெளியான  செய்திகளின் அடிப்படையிலும், வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு  அடிப்படையிலும்  இந்த ஆய்வானது நடத்தப்பட்டுள்ளது. 

சென்னை உலகளவில் பாதுகாப்பான நகரங்களில், 208வது இடத்தை பிடித்திருந்தது. அதிலும்  இந்தியாவிலேயே முதல் இடத்தை பிடித்திருந்தது சென்னை.

அளவீடு செய்யப்பட்ட 334 நகரங்களில் சென்னை 208வது இடத்தை பிடித்திருந்தது.. அதாவது பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மாநகரங்கள்: இந்திய அளவிலேயே பாதுகாப்பான மாநகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 இதேபோல் அவ்தார் நிறுவனம் நடத்திய ஆய்விலும், 10 லட்சத்துக்கும் மேல், மக்கள் தொகை உள்ள நகரங்களின் வரிசையில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநகரம் என்று சென்னை அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னையில், சைபர் குற்றங்களிலிருந்து பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல்துறையால் நடத்தப்பட்டு வருகிறது. கடந்தவாரம் தொடர்பான பேரணியை, சென்னை காவல் ஆணையாளர் கொடியசைத்து துவக்கி வைத்திருந்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women's safety: Chennai is the top in the country!


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->