திருவள்ளூர்: தொழிற்சாலை எந்திரத்தில் சிக்கி வெளிமாநில தொழிலாளி பலி.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் இரும்பு உருக்கு தொழிற்சாலை எந்திரத்தில் சிக்கி வெளிமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தோள்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் சாடா(38) என்பவர் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை அவர் வழக்கம் போல் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தபோது தானியங்கி வெல்டிங் எந்திரத்தில் எதிர்பாராத விதமாக சிக்கியுள்ளார்.

இதனால் பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

worker dies after getting stuck in factory machinery in tiruvallur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->