10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி.. போக்சோ சட்டத்தில் கைது.!
worker sexually harassed a 10-year-old girl was arrested under the POCSO Act
10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மூலங்குடி பெருமாள் கோவில் தெருவில் கருப்பையன்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பையன் அதே பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் கருப்பையனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
worker sexually harassed a 10-year-old girl was arrested under the POCSO Act