உலகத் தமிழர்களை அவமானப்படுத்துகிறார் ஆளுநர்! டி. கே. எஸ். இளங்கோவன் கண்டனம்! - Seithipunal
Seithipunal


உலகத் தமிழர்களை அவமானப்படுத்துகிறார் என ஆளுநர்க்கு டி. கே. எஸ். இளங்கோவன் கண்டனம். நேற்று "திருவள்ளுவர் திருநாள் விழா அழைப்பிதழ்" என்று தமிழக ஆளுநர் ஒரு அழைப்பிதழை வெளியிட்டு இன்று ராஜ் பவனில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட உள்ளதாகக் கூறி, திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்திருப்பது போல் ஒரு புகைப்படத்தையும் அந்த அழைப்பிதழில் அச்சிட்டிருந்தார்.

நேற்றே இது பெரும் சர்சையைக் கிளப்பிய நிலையில், இன்று திமுக செய்தி தொடர்புக் குழுத்தலைவர் டி. கே. எஸ். இளங்கோவன் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "தை 1ம் தேதி தான் தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான திருவள்ளுவர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் தமிழக ஆளுநர் உலகிலுள்ள அனைத்து தமிழர்களையும் அவமானப்படுத்தும் விதமாக, திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது மட்டுமல்லாமல், திருவள்ளுவரின் நட்சத்திரத்தை அறிவித்து இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடுவது ஏற்புடையதல்ல. 

ஒரு திருக்குறள் கூட ஆளுனருக்குத் தெரியாது, இவருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? பிரதமர் மோடியின் வழி ஆளுநர் திட்டமிட்டு இவ்வாறு தொடர்ந்து தமிழகத்தில் செய்து வருகிறார். இது அவருடைய அறியாமையை காட்டுகிறது. தொடர்ந்து திமுக ஆளுநரது செயலை வன்மையாகக் கண்டிக்கிறது" என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World tamil people governor is humiliating


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->