#தமிழகம் || பொய்யான தகவல் - செல்போனில் சிக்கிய விடியோவால் 10 ஆயிரம் அபராதம் விதிப்பு.! - Seithipunal
Seithipunal


சந்தன மரங்கள் பதுக்கி வைத்திருப்பதாக பொய்யான தகவலை அளித்த நபருக்கு வனத்துறையை சேர்ந்த போலீசார் ரூபாய் 10,000 அபராதம் விதித்துள்ளனர்.
 
தென்காசி மாவட்டம், பால்வண்ணநாதபுரம் கிராமத்தில் சந்தன மரங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அடுத்து வனத்துறை அதிகாரிகள் இந்த பகுதிகள் சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால் அந்த பகுதியில் சந்தன மரங்கள் கடத்தப்பட்டதாக அல்லது வெட்டப்பட்டது போன்ற எந்த முகாந்திரமும் இல்லை. 

இதனை அடுத்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்த பால் ஜெகன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். 

அப்போது அவர் குடும்ப தகராறு காரணமாக வனத்துறை அதிகாரிகளுக்கு தவறான தகவலை அளித்தது தெரியவந்தது. மேலும் அவருடைய செல்போனை ஆய்வு செய்த வனத்துறை அதிகாரிகள், அதில் பாம்பை கொன்று, அதனை வீடியோ எடுத்து வைத்திருப்பது தெரியவந்தது. 

இதனையடுத்து அவருக்கு, பொய்யான தகவலை அளித்தது, பாம்பைக் கொலை செய்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக ரூபாய் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wrong info case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->