ஏற்காடு பேருந்து விபத்து: டிரைவரின் லைசென்ஸ் ஐந்து ஆண்டுகளுக்கு ரத்து! - Seithipunal
Seithipunal



கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மலையின் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாலை 5 மணிக்கு ஒரு தனியார் பேருந்து சேலம் நோக்கி புறப்பட்டு உள்ளது. இந்த பேருந்தை மணி என்ற நபர் ஓட்டிக் கொண்டு வந்துள்ளார். இவர் சேலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்காடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு மலையில் கீழே இறங்கி கொண்டிருந்த போது, 5.40 மணியளவில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 13வது கொண்டை ஊசி வளைவில் இருந்து  12வது வளைவை தாண்டி 11வது கொண்டை ஊசி வளைவில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. 

இதையடுத்து விபத்தை நேரில் பார்த்தவர்கள் தந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் துரிதமாக செயல்பட்டனர். இவ்விபத்தில் 11 வயது சிறுவன் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயும், படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துக்கான விசாரணையில் அதிக பயணிகளை பேருந்தில் ஏற்றியதும், வளைவில் அதிவேகமாக திரும்பியதில் ஸ்டியரிங் ராட் உடைந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து இந்த விபத்துக்கு முழுக்க முழுக்க பேருந்து ஓட்டுநரின் கவனக் குறைவே காரணம் என்று கூறி ஓட்டுநர் மணியின் லைசென்ஸை 5 ஆண்டுகளுக்கு ரத்து செய்து உததரவிடப் பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yercaud Bus Accident Drivers License Got Cancelled For 5 Years


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->