பூட்டிய வீட்டில் பிணமாக கிடந்த வாலிபர்.! கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை
Young man found dead in a locked house in Tiruppur
திருப்பூர் மாவட்டத்தில் பூட்டிய வீட்டில் பிணமாக கிடந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி (29). இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் தனியாக வீடு எடுத்து தாங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் வீட்டுக்குள் சென்ற அழகர்சாமி இரவு வெகு நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டி உள்ளனர். ஆனால் அழகர்சாமி கதவைத் திறக்காததால் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அழகர்சாமி பிணமாக கிடந்துள்ளார்.
இதையடுத்து அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அழகர்சாமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Young man found dead in a locked house in Tiruppur