கோவை || தாலியைக் கழற்றி கொடுத்துவிட்டுச் சென்ற காதலி - மன உளைச்சலில் காதலன் தற்கொலை முயற்சி.! - Seithipunal
Seithipunal


கோவை || தாலியைக் கழற்றி கொடுத்துவிட்டுச் சென்ற காதலி - மன உளைச்சலில் காதலன் தற்கொலை முயற்சி.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே டி.நல்லிகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் அருண் சக்ரவர்த்தி. தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வரும் இவருக்கு இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாறியது.

இதையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இருவரும் கடந்த 1-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறி ஆச்சிப்பட்டியில் உள்ள கோவிலில் திருமணம் செய்துக்கொண்டனர். 

இதற்கிடையே இருவரின் பெற்றோர்களும் மாயமானவர்களை கண்டுபிடித்து தரும்படி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரையும் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இதை அறிந்த காதல் ஜோடி பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அங்கு போலீசார் விசாரணை நடத்தி இளம்பெண்ணை அருண் சக்ரவர்த்தியுடன் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இளம்பெண்ணை சந்தித்த அவரது உறவினர்கள், வீணாக வாழ்க்கையை தொலைத்து விடாதே, எங்களுடன் வந்து விடு என்று ஆலோசனை வழங்கினர். 

இதை கேட்ட இளம்பெண் அருண் சக்ரவர்த்தி கட்டிய தாலியை கழற்றி கொடுத்து விட்டு உறவினர்களுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். திருமணம் செய்துக்கொண்ட காதலி தாலியை கழற்றி கொடுத்து விட்டு சென்றதால் மனவேதனை அடைந்த அருண் சக்ரவர்த்தி விஷத்தை குடித்துள்ளார்.

இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பொள்ளாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man sucide attempt incoimbatore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->