தென்காசி || குழந்தையுடன் காவல் நிலையம் முன்பு இளம்பெண் தர்ணா.!
young woman protest with four years old son in tenkasi
தென்காசி || குழந்தையுடன் காவல் நிலையம் முன்பு இளம்பெண் தர்ணா.!
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆவாரந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி மகள் காளீஸ்வரி. இவருக்கு கடந்த 2017ம் ஆண்டு நெல்லையைச் சேர்ந்த ஆனந்த செல்வம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
ஆனால், அடுத்த நான்கு மாதங்களிலேயே தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இதையடுத்து காளீஸ்வரி, நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.
அப்போது காளீஸ்வரிக்கும், அவரது உறவினரான ஆனந்த்பாபு என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் கடந்த 2019 ம் ஆண்டு 2வது இரண்டாவது திருமணம் செய்துள்ளனர். தற்போது இவர்களுக்கு ஆரிஸ் மித்ரதேவ் என்ற நான்கு வயது குழந்தை உள்ளது.
இந்த நிலையில் ஆனந்த்பாபுவும் அவரது பெற்றோரும் காளீஸ்வரியுடன் நடந்த திருமணத்தை மறைத்து விட்டு ஆனந்த்பாபுவிற்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயித்து அதன் படி மதுரை திருப்பரங்குன்றத்தில் நேற்று திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடந்துள்ளது.
இதையறிந்த காளீஸ்வரி, ஆனந்தபாபு வீட்டுக்குச் சென்று திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். அப்போது ஆனந்த் பாபு அவரது பெற்றோருடன் சேர்ந்து காளீஸ்வரியையும் அவரது தாயாரையும் அவதூறாக பேசியதுடன் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுதுள்ளனர்.
இது தொடர்பாக காளீஸ்வரி, நேற்று முன் தினம் இரவு கழுகுமலை காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த போலீஸார், “நீங்கள் குடும்பம் நடத்தியது திருநெல்வேலி என்பதால், சென்று புகார் அளியுங்கள்'' என்று அறிவுறுத்தியுள்ளனர்.
அதன் படி காளீஸ்வரி திருநெல்வேலிக்கு சென்று புகார் அளிக்க முயன்ற போது திருப்பரங்குன்றத்தில் திருமணம் நடைபெற உள்ளதால் அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறு அங்கிருந்த போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கணவரின் மோசடி மற்றும் போலீஸாரின் அலைக்கழிப்பால் பாதிக்கப்பட்ட காளீஸ்வரி, தனது 4வயது குழந்தையுடன் கழுகுமலை காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். இதனால், காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
young woman protest with four years old son in tenkasi